சீனாவில் பயங்கர பூகம்பம்: 13 பேர் பலி: பலர் காயம் | தினகரன்

சீனாவில் பயங்கர பூகம்பம்: 13 பேர் பலி: பலர் காயம்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் கடந்த செவ்வாய் இரவு இடம்பெற்ற 7.0 புள்ளி அளவு சக்திவாய்ந்த பூகம்பத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மிகக் குறைவான மக்கள் வசிக்கும் சின்சுவான் வடக்கு பகுதியிலேயே பூகம்பம் இடம்பெற்றிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. எனினும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று சில செய்திகள் கூறுகின்றன.

பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதி சுற்றுலா பயணிகளிடம் பிரபலமான பிரதேசத்திற்கு அருகில் உள்ளது.

சிச்சுவான் மாகாணம் பூகம்பம் தாக்கும் பகுதியாக இருப்பதோடு 2008 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற பூகம்பத்தில் 70,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.

மாகாண தலைநகர் சென்டுவிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்திலேயே இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. பூகம்பத்தால் இடிந்திருக்கும் ஹோட்்டல்கள் மற்றும் வீடுகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நகர மைத்தில் இருக்கும் சதுக்கம் ஒன்றில் அதிக மக்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீன செஞ்சிலுவைச் சங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நெருக்கடி நேர நிபுணர்களையும், மீட்பாளர்களையும் அனுப்பியுள்ளது. 


Add new comment

Or log in with...