ஹஜ் கடமைக்காக கஃபாவின் கிஸ்வா துணி உயர்த்தப்பட்டது | தினகரன்

ஹஜ் கடமைக்காக கஃபாவின் கிஸ்வா துணி உயர்த்தப்பட்டது

முஸ்லிம்களின் ஹஜ் கடமைக்கான முன்னேற்பாடாக புனித கஃபாவை போர்த்தி இருக்கும் கிஸ்வா துணியின் கீழ் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று மீற்றர்கள் மேலே உயர்த்தப்பட்டது.

கிஸ்வா போர்வையின் வெள்ளை பருத்தி துணி உள்ள பகுதியே நான்கு பக்கங்களாலும் இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஹஜ் கடமையின்போது கஃபாவை வலம்வரும் யாத்திரிகர்களால் கிஸ்வா துணிக்கு சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கவே இரு புனித பள்ளிவாசல்களின் பொதுத் தலைமையகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கான திட்டங்களில் ஒன்றாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கஃபாவின் போர்வைக்கான மன்னர் அப்துல்லாஹ் வளாகத்தின் பொது இயக்குனர் முஹமது பஜவுதா குறிப்பிட்டார். “இது சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். பெரும் எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் கஃபாவை தொட முயற்சிக்கும் நிலையில் இந்த துணிக்கு சில சேதங்கள் ஏற்படலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.

சில யாத்திரிகர்கள் கிஸ்வா துணியின் பாகங்களை வெட்டி நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மூட நம்பிக்கை காரணமாக கிஸ்வா வழக்கமான இடத்தில் இருந்து உயர்த்தப்படுவதாகவும் அவர் கூறினார். 


Add new comment

Or log in with...