இஸ்ரேல் வான் தாக்குதல்களில் காசாவில் 4 பலஸ்தீனர் காயம் | தினகரன்

இஸ்ரேல் வான் தாக்குதல்களில் காசாவில் 4 பலஸ்தீனர் காயம்

காசா பகுதியில் ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதோடு அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

காசாவின் மூன்று இடங்கள் மீது கடந்த செவ்வாய் இரவு தாக்குதல் இடம்பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரேல் மீது ரொக்கெட் வீசியதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் பேச்சாளர் ஹஸம் கஸம் மறுத்துள்ளார். “காசாவின் மத்திய பகுதியில் இருக்கும் ஹமாஸ் நிலைகளே வான் தாக்குதலில் இலக்கானது” என்று அவர் கூறினார்.

“நாம் அமைதியை காத்து வருகிறோம். எந்த ஒரு ரொக்கெட் தாக்குதலையும் நடத்தவில்லை. அமைதியான காலத்தில் அதனை மீறுவது பயனுல்லதாக இருக்காது” என்றும் அவர் கூறினார். இதில் காயமடைந்த மூவர் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வெளியேறியபோதும் 26 வயது இளைஞர் ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு சுயநினைவற்று சிகிச்சை பெற்று வருவதாக காசாவின் அல் ஷிபா மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.

காசாவில் இருந்து வரும் அனைத்து ரொக்கெட் குண்டுகளுக்கும் ஹமாஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று இஸ்ரேல் கருதுகிறது.


Add new comment

Or log in with...