வவுனியாவில் விபத்து; ஒருவர் பலி; மூவர் படுகாயம் | தினகரன்

வவுனியாவில் விபத்து; ஒருவர் பலி; மூவர் படுகாயம்

 
வவுனியாவில் இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 
 
இன்று (08) பிற்பகல் 1.45 மணியளவில் வவுனியா, மூன்று முறிப்பு இ.போ.ச. சாலைக்கு முன்பாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
 
 
வவனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயஸ் வேன் ஒன்று, வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 
 
இவ்விபத்தில் வாகனத்தை செலுத்திய, சுவிஸ் நாட்டைந் சேர்ந்த காந்தன் (56) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 
 
 
அத்துடன் தர்சன் (26), அப்றஜிதன் (23), கிரிதரன் (25) ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
வெளிநாடு செல்லவிருந்த தங்களது உறவினரை விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
 
இரு வாகனங்களும் வேகமாக வந்துள்ள நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
 
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)
 
 

Add new comment

Or log in with...