களனி பால போக்குவரத்து வழமைக்கு; சாரதி கைது (UPDATE) | தினகரன்

களனி பால போக்குவரத்து வழமைக்கு; சாரதி கைது (UPDATE)

 
களனி பாலத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிடிருந்த வீதி சமிக்ஞை பதாகை மீது மோதிய லொறி சாரதி கிராண்ட்பாஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த கனரக வாகனம் வாகனங்களை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சீமெந்து கலக்கும் இயந்திரமொன்றை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
 
இதன்போது குறித்த இயந்திரம், பதாகையின் மீது மோதி அதனை சேதப்படுத்தியதன் காரணமாக அது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதன் காரணமாக இன்று (04) காலை கொழும்பு - கண்டி பாதை, கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக பாதையின் கொழும்புக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பாதைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு, இந்நெரிசல் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
 

களனி பாலத்தின் வழியான போக்குவரத்து வழமைக்கு (UPDATE)

கொழும்பு - கண்டி வீதியில் களனி பாலத்திற்கு அருகில் வீழ்ந்த பதாகை அகற்றப்பட்டுள்ளது.
 
குறித்த பாதை வழியான போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
 

களனி பாலத்தில் பாரிய பதாகை வீழ்வு; வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி வீதியில் களனி பாலத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த வீதி சமிக்ஞை பதாகை வீழ்ந்ததில் அப்பகுதியில் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
இன்று (04) காலை ஏற்பட்ட குறித்த விபத்தில், வாகனம் ஒன்றின் மீது குறித்த பதாகை வீழ்ந்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.
 
இதன் காரணமாக குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
குறித்த பதாகையை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
இதனை கருத்திற் கொண்டு, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடக மத்தியநிலையம் அறிவித்துள்ளது.
 
அதன்படி, கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் நவலோக சுற்றுவட்டத்தில் ஜப்பான் நட்புறவு பாலத்தின் வழியாக கொழும்பிற்கு வர முடியும் எனவும் அவ்வாறில்லையெனில் மாற்று வீதியை பயன்படுத்தி வாகன நெரிசலை குறைப்பதற்கு உதவுமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களை வேண்டுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
 

Add new comment

Or log in with...