சைட்டம் எதிர் பேரணிக்கு மேலும் ஒரு தடையுத்தரவு (UPDATE) | தினகரன்

சைட்டம் எதிர் பேரணிக்கு மேலும் ஒரு தடையுத்தரவு (UPDATE)

(வைப்பக படம்)
 
கொழும்பு வந்தடைந்துள்ள சைட்டம் பேரணிக்கு பல்வேறு அரசாங்க மற்றும் முக்கிய அலுவலகங்களுக்குள் நுழைவதற்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு கருதி, பொலிசாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து கோட்டை நீதவானினால் குறித்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 
அதற்கமைய, பிரதமர் காரியாலயம், அலறி மாளிகை, அமெரிக்க தூதுவராலயம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 

சைட்டம் எதிர் பேரணிக்கு நீதிமன்ற தடையுத்தரவு

மாலபே தனியார் வைத்திய பீடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவொன்றை வழங்கியுள்ளது.
 
இன்றைய தினம் (04) வழங்கிய குறித்த தடையுத்தரவில்,பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அரசாங்க அலுவலகங்களுக்குள் நுழவதற்கும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
 
கடந்த திங்கட்கிழமை (31) பேராதெனியவில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று (04) கொழும்பு கோட்டையை வந்தடைந்தவுடன் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பேரணியில், தேசிய தொழிற்சங்க மத்தியநிலையம் மற்றும் தொழிலாளர் போராட்ட மத்தியநிலையம் ஆகியன கடவத்தையில் வைத்து இணைந்தன.
 
அத்துடன், களனி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் மற்றும் மருத்துவ பீட பேராசிரியர் சங்கம் ஆகியனவும் இப்பேரணியில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...