நாமலின் சொகுசு காரை விடுவிக்குமாறு நீதிமன்ற உத்தரவு | தினகரன்

நாமலின் சொகுசு காரை விடுவிக்குமாறு நீதிமன்ற உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சொகுசு காரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
குறித்த வழக்கு இன்றைய தினம் (03) கடுவெல நீதவான் பிரியந்த அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அக்காரை 3 வாரங்களுக்குள் விடுவிக்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் (FCID) உத்தரவிடப்பட்டது.
 
குறித்த சொகுசு கார், நாமல் ராஜபக்‌ஷவினால் பயன்படுத்தப்பட்டு, பின்னர் கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரால், ரூபா 85 இலட்சத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது பழுதுபார்ப்பதற்காக வாகன திருத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, FCID யினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
 
குறித்த வழக்கில் சந்தேகநபரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும், கார் FCID பிரிவில் துருப்பிடிக்கும் நிலையில்  உள்ளதாக, வாகன உரிமையாளரின் வழக்கறிஞரால் சுட்டிக்காட்டப்பட்டதோடு, அதனைன விடுவிக்குமாறு கோரியதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 

Add new comment

Or log in with...