தொலைபேசி தரவுகளுக்குள் ஊடுருவினால் தண்டனை | தினகரன்

தொலைபேசி தரவுகளுக்குள் ஊடுருவினால் தண்டனை

 
தங்களிடமுள்ள அர்ஜுன் அலோசியஸின் கையடக்க தொலைபேசியின் தரவுகளுக்குள் யாரேனும் ஒருவர் ஊடுருவ முயற்சித்தால், அது தண்டனைக்குரிய குற்றமாகும் என சர்ச்சைக்குரிய திறைசேரி பிணை முறி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, அறிவித்துள்ளது.
 
அர்ஜுன் அலோசியஸின் குறித்த தொலைபேசியின் தகவல்களை, அர்ஜுன் அலோசியஸ் தனது மனைவியான, அர்ஜுன் மகேந்திரனின் மகள் அஞ்சலி மகேந்திரனின் சிங்கப்பூர் இலக்கத்தை கொண்ட அப்பிள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி அழிக்க முயற்சித்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று முன்தினம் (01) ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அறிவித்திருந்தது. 
 
இவ்வாறான விடயங்களை தவிர்க்கும் வகையிலான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு, ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதகொட, ஆணைக்குழுவிடம் கோரியதற்கு அமைய இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அர்ஜுன் அலோசியஸ் குறித்த கையடக்க தொலைபேசியை கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே, குறித்த ஐபோனின் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை (Username, Password) தாம் மறந்துவிட்டதாக அர்ஜுன் அலோஸியஸ் ஆணைக்குழுவில் தெரிவித்திருந்த நிலையில், அதிலிருந்த சுமார் 8,600 பக்கங்களில் அமைந்த தரவுகளை மீட்டதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தது.
 

Add new comment

Or log in with...