2nd Test-Day 02: இந்திய அணி 622/9d | தினகரன்

2nd Test-Day 02: இந்திய அணி 622/9d

 
சுற்றுலா இந்திய அணி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் கொழும்பில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 622 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.
 
3 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்கள் எனும் நிலையிலிருந்து இன்றைய (04) இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணியின் புஜாரா (128) மற்றும் ரஹானே (103) முறையே 133 மற்றும் 132 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
 
அந்த வகையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தேநீர் இடைவேளையை அடுத்து 9 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 622 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் தங்களது முதல் இன்னிங்ஸை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது.
 
இந்தியா 622/9d (158)
சித்தேஸ்வர் புஜாரா 133
அஜிங்யா ரஹானே 132
ரவீந்திர ஜடேஜா 70*
 
இலங்கை அணி சார்பில்
ரங்கன ஹேரத் 4/154
மலிந்த புஷ்பகுமார 2/156
 

Add new comment

Or log in with...