Friday, April 19, 2024
Home » விசாரணைகளுக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிக்கவும்
சனல்-4 குற்றச்சாட்டுகள்:

விசாரணைகளுக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிக்கவும்

-ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைப்பு

by sachintha
October 17, 2023 6:33 am 0 comment

சனல்- 4 அலைவரிசை வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பான காணொளியில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்ககோரும் யோசனை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சில அரசியல்வாதிகள் மற்றும் சிரேஷ்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்படி தற்கொலைக் குண்டுதாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாகவும் அந்த குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் உள்ளதாகவும் சனல்-4 அலைவரிசை

குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது அவசியமெனவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது யோசனையில் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் தெரிவுக்குழுவின் அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிகக வேண்டுமென்றும் அவரக்ள் அந்த யோசனையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேஜர் பிரதிப் உந்தகொட, வஜீர ஆபேவர்தன, குணதிலக்க ராஜபக்‌ஷ, சஞ்ஜீல் எதிரிமா, டி. சீரவிங்க, சுமித்த உடும்பும்புர, ஜயந்த கெட்டகொட, ஜகத் சமரவிக்கிரம கருணாதாஸ கொடித்துவக்கு, மதுர விதானகே, சமன்பிரிய ஹேரத், ஜகத்குமார சுமித்ரா ஆரச்சி, டி.பி. ஹேரத், கோகிலா ஹர்சனிகுணவர்தன, உபுல் மகேந்திரராபக்‌ஷ, உதயகாந்த குணதிலக்க, எச். நந்தசேன, நாளக கோட்டேகொட, குமாரசிறி ரத்நாயக்க மற்றும் சி. பி. ரத்நாயக்க ஆகியோர் மேற்படி யோசனையில் கைத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT