மனைவியின் தொலைபேசியூடாக அர்ஜுன் தரவுகளை அழிக்க முயற்சி | தினகரன்

மனைவியின் தொலைபேசியூடாக அர்ஜுன் தரவுகளை அழிக்க முயற்சி

 
அர்ஜுன் அலோசியஸ், ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய தனது தொலைபேசி தரவுகளை அழிக்க முயற்சித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று (01) சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் மத்திய வங்கியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ், தனது மனைவியின் அப்பிள் ஐபோன் தொலைபேசியூடாக, தான் கையளித்த கையடக்க தொலைபேசியிலுள்ள தரவுகளை அழிக்க முயற்சித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
குறித்த ஆணைக்குழுவின் அமர்வில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நாளை (02) இது தொடர்பில் முடிவொன்றை எட்டவுள்ளதாக அவ்வாணைக்குழு அறிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...