திருகோணமலை பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைது | தினகரன்

திருகோணமலை பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைது

(கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் பொலிசார்)
 
ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
திருகோணமலை, 4 ஆம் மைல்கல் பிரதேசத்தில் வைத்து 570 மில்லி கிராமுடன் ஒருவரும் 50 மில்லிக் கிராமுடன் மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டதோடு, திருகோணமலை சங்கமம் பிரதேசத்தில் 50 மில்லிக் கிராம் ஹெரோயினுட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
குறித்த நபர்களை நேற்று (31) திருகோணமலை பிராந்திய நச்சுத் தன்மையான போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 
தமக்கு கிடைத்த இரகசிய  தகவலை அடுத்து, குறித்த பிரதேசத்துக்குச் சென்று    குறித்த நபர்களை சோதனை செய்த போது இவை கைப்பற்றப்பட்டதாகவும்
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த  நபர்களை திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
(கிண்ணியா மத்திய நிருபர் - கியாஸ்)
 

Add new comment

Or log in with...