2nd Test: இலங்கை எதிர் இந்தியா; இந்தியா துடுப்பாட்டம் | தினகரன்

2nd Test: இலங்கை எதிர் இந்தியா; இந்தியா துடுப்பாட்டம்

 

மலிந்த புஷ்பகுமார அறிமுகம்

 
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று (03) கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் ஆரம்பமானது.
 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
 
இப்போட்டியில், அறிமுக வீரராக மலிந்த புஷ்பகுமார இடம்பெறுகிறார்.
 
சகல துறை ஆட்டக்காரரான 30 வயது புஷ்பகுமார, முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருபவர் என்பதோடு, வலது கை துடுப்பாட்ட வீரராகவும், இடது கைது சுழல் பந்துவீச்சாளராகவும் உள்ளார்.
 
மலிந்த புஷ்பகுமார - முதல் தர போட்டி
போட்டி ஓட்டங்கள் விக்கெட்டுகள்
99 1,542 558
 
இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது. எனவே, தொடரை சமப்படுத்துவதற்கு இலங்கை அணி இப்போட்டியை வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில் உள்ளதோடு, இப்போட்டியை வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்ற முடியும் எனும் நிலையில் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...