Home » பல்லின சமூகத்தவரையும் ஒன்றிணைத்த கல்முனை வலய சிறுவர் தின நிகழ்வு

பல்லின சமூகத்தவரையும் ஒன்றிணைத்த கல்முனை வலய சிறுவர் தின நிகழ்வு

by sachintha
October 17, 2023 1:10 pm 0 comment

சமயப் போதனைகளினூடாக பல்லின சிறுவர்களின் உரிமைகளையும் அரவணைப்பதை நோக்காகக் கொண்டு கல்முனை கல்வி வலயம் ஏற்பாடு செய்த சிறுவர் தின பிரதான நிகழ்வு கல்முனை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.

எச்.றியாஸா தலைமையில் அலுவலக முன்றலில் அண்மையில் நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

‘திசை திரும்பும் சிறுவர் எதிர்காலம்’ எனும் கருப்பொருளில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லுாரி மாணவர்களின் வீதி நாடகம் இடம்பெற்றது. போதைப் பொருள் பவனை, கையடக்கத் தொலைபேசியின் ஆதிக்கம், கல்வியில் அக்கறையற்ற நிலை முதலிய அம்சங்களைப் பிரதிபலிப்பதாக இந்நாடகம் அமைந்ததிருந்தது. உவெஸ்லி உயர்தரப் பாடசாலை முன்றலில் நாடகம் இடம் பெற்றது.

நாடகம் நிறைவுற்றதும் அங்கிருந்து மாணவர்களும் அதிதிகளும் நடைபவனியாக வலயக் கல்வி அலுவலக முன்றலுக்கு அழைத்து வரப்பட்டனர். சர்வசமய அனுஷ்டானங்களுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் நடனம் மற்றும் உட்படுத்தல் விளையாட்டு என்பன இடம்பெற்றன. கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது. பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபிர், ஜிஹானா ஆலிப், என்.வருண்யா ஆகியோர் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வுகளுக்கான அனுசரணையினை Deaf Link நிறுவனம் வழங்கியது. அம்பாறை மாவட்ட திட்ட இணைப்பாளர் ரீ.இளையராஜா விஷேட அதிதியாகக் கலந்து கொணடார். கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள்,வளவாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

–ஜெஸ்மீ எம்.மூஸா…
(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT