குளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் பதிப்பு | தினகரன்


குளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் பதிப்பு

 
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லட்சுமி தோட்டம் நடுப்பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 
 
ஆசிரியை ஒருவர் உட்பட 36 பெண் தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
இன்று (02) பிற்பகல் 2.30 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த போது தேயிலை செடியினுள்ளிருந்த குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது
 
இதில் அவ்வழியாக பாடசாலை விட்டு சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவருக்கும் கொழுந்து  பறித்துகொண்டிருந்த பெண்கள் மீதும் குளவி கொட்டியுள்ளது 
 
 
பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் 27 பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் குளவி தாக்குதலில் அதிகம் பாதிப்புக்குள்ளான ஆசிரியை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலா வைத்தியசலை அதிகாரிகள் தெரிவித்தனர் 
 
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு. இராமசந்திரன்)
 
 

Add new comment

Or log in with...