தலவாக்கலையில் பிள்ளையார் சிலை திருட்டு | தினகரன்

தலவாக்கலையில் பிள்ளையார் சிலை திருட்டு

 
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பெரிய மல்லிகைப்பூ தோட்டத்தின் வழிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாதவர்கள் களவாடிச் சென்றுள்ளனர்.
 
இன்று (31) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், இரும்பு கம்பியாலான கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பிள்ளையார் சிலையே இவ்வாறு திருடப்பட்டுள்ளதெனவும் விசாரணைகளை மேற்கொள்ளும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
இன்று (31) காலை சிலை காணாமல் போனதை கண்டு பிரதேவாசிகள், தலவாக்கலை பொலிஸாருக்கு முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
 
இதனையடுத்து பொலிஸார் ஆலய கட்டிடத்திற்கு சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
 
 
சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகைளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இது இவ்வாலயத்தில் பதிவாகும் மூன்றாவது சம்பவம் என்பதோடு, இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இவ்வாறு சிலை களவாடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. 
 
(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
 
 

Add new comment

Or log in with...