பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை... | தினகரன்

பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை...

 
இவ்வருடத்திற்கான அரச மற்றும் அரசாங்கம் அங்கீகரிதுள்ள தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறைகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
 
அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல் செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை, சிங்கள; தமிழ்; அரச; தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
 
அதன் அடிப்படையில், குறித்த பாடசாலைகள் செப்டெம்பர் 06 ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
எதிர்வரும் ஓகஸ்ட 08 ஆம் திகதி க.பொ.த. உயர் தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அப்பரீட்சைகளுக்கான மண்டபங்களாக செயற்படும் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஓகஸ்ட் 04 முதல் செப்டெம்பர் 06 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதோடு, ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் 18 முதல் ஓகஸ்ட் 28 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இரண்டாம் தவணை விடுமுறை (2017)
சிங்கள, தமிழ், அரச, தனியார் பாடசாலைகள்
ஓகஸ்ட் 04 - செப்டெம்பர் 06
 
முஸ்லிம் பாடசாலைகள் (பரீட்சை மண்டபங்களாக செயற்படாத)
ஓகஸ்ட் 18 - ஓகஸ்ட் 28
 
 

Add new comment

Or log in with...