கடவுச்சொல்லை வழங்குமாறு அர்ஜுன் அலோசியஸிற்கு உத்தரவு | தினகரன்

கடவுச்சொல்லை வழங்குமாறு அர்ஜுன் அலோசியஸிற்கு உத்தரவு

 
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அர்ஜுன் அலோசியசிடமிருந்து அவர் பயன்படுத்திய அப்பிள் ஐபோன் கையடக்க தொலைபேசியின் அப்பிள் கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை (Username & Password) வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறி தொடர்பில் விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த முறி பரிமாற்றம் இடம்பெற்ற காலப்பகுதியில் (2015-2016) அர்ஜுன் அலோசியஸ் பயன்படுத்திய அவரது ஐபோனிலுள்ள தகவல்களை அறிந்து கொள்ளும் பொருட்டு, அவரது கடவுச்சொல்லை ஆணைக்குழு கோரிய போதிலும் அவர் அதனை மறுத்துள்ள நிலையில் உத்தியோகபூர்வமாக இவ்வுத்தரவை ஆணைக்குழு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கடந்த திங்கட்கிழமை (24), மத்திய வங்கியின் திறைசேரி முறி தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 2015 - 2016 காலப்பகுதியில் அர்ஜுன் அலோசியஸ் பயன்படுத்திய தொடர்பாடல் சாதனங்களை, ஆணைக்கழுவுடன் இணைந்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவிடம் (CID) கையளிக்குமாறு கோரியிருந்தது,
 
அதனை அடுத்து, அன்றைய தினம் (24) குறித்த உபகரணங்கள் அவரால் கையளிக்கப்பட்டதாயினும், இதன்போது அவர் வழங்கிய கையடக்க தொலைபேசி கடந்த 6 மாதங்களுக்குட்பட்ட பயன்பாட்டை கொண்டதென அறிய வந்ததோடு, மீண்டும் அவரிடம் குறித்த தொலைபேசியை வழங்குமாறு உத்தரவிட்டதை அடுத்து, அவர் தனது ஐபோனை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...