1st Test - Day 02: இலங்கை 154/5 ஓட்டங்கள் (UPDATE) | தினகரன்

1st Test - Day 02: இலங்கை 154/5 ஓட்டங்கள் (UPDATE)

(நுவன் பிரதீப்)
 
காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின், இன்றைய (27) இரண்டாவது நாள் நிறைவில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.
 
அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் ஆடுகளத்தில் ஆட்டமிழக்காதுள்ளனர்.
 
அஞ்சலோ மெத்திவ்ஸ் 54*
குசல் பெரேரா 06*
 
உபுல் தரங்க 64
 
இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையம் இழந்து 600 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
அந்த வகையில் இலங்கை அணி, இந்திய அணியிலும் பார்க்க 446 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
 
நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும்.

1st Test - Day 02: முதல் இன்னிங்ஸில் இந்திய 600 ரன்கள் (UPDATE)

இந்திய கிரிக்கெட் அணியுடன் காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையம் இழந்து 600 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
சிக்கர் தாவன் 190
சத்தேஸ்வர் புஜாரா 153
அஜிங்யா ரஹானே 57
ஹார்டிக் பாண்ட்யா 50
 
நுவன் பிரதீப் 6/132
லஹிரு குமார 3/131
ரஹ்கன ஹேரத் 1/159

1st Test - Day 02: மதியம் வரை இந்தியா 503/7

காலியில் இடம்பெற்று வரும் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் பகல் போசண இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 503 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
3 விக்கெட் இழப்புக்கு 399 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்றைய இரண்டாம் நாளை ஆரம்பித்த இந்திய அணி சார்பில் சத்தேஸ்வர் புஜாரா 153 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்தார்.
 
இதனையடுத்து, ரஹானே (57), சஹா (16), அஸ்வின் (47) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
 
இலங்கை அணி சார்பில் நுவன் பிரதீப் தனது முதலாவது 5 விக்கெட் பெறுதியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...