எரிபொருள் அத்தியவசிய சேவை; இராணுவ கட்டுப்பாட்டில் விநியோகம் | தினகரன்

எரிபொருள் அத்தியவசிய சேவை; இராணுவ கட்டுப்பாட்டில் விநியோகம்

 
எரிபொருள் விநியோகமானது அத்தியவசிய சேவை என, அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டது.
 
நேற்று (25) இரவு விடுக்கப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து, பெற்றோலிய ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முத்துராஜவல மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இன்று (26) அதிகாலை முதல் எரிபொருள் விநியோகம் மேற்கொண்டு வருவதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.
 
ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய ஊழியர்கள் சங்கத்தினர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் பெரும் அசௌகரியத்திற்குள்ளானதன் காரணமாக அரசாங்கம் மேற்படி வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...