உறவினரின் காலில் விழுந்து கதறிய நீதிபதி இளஞ்செழியன் (VIDEO) | தினகரன்


உறவினரின் காலில் விழுந்து கதறிய நீதிபதி இளஞ்செழியன் (VIDEO)

 

 
உயிரிழந்த தனது  மெய்ப்பாதுகாவலருடைய உறவினரின் காலில் விழுந்து  நீதிபதி ம.இளஞ்செழியன் கதறிய சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க வைத்ததது.
 
யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் 17 ஆண்டுகால நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் பொலிஸ் உத்தியோகத்தருமான சரத் பிரேமசந்திர (58) சிகிச்சை பலனின்றி இன்று (23) அதிகாலை யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
 
இந்நிலையில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த மெய்பாதுகாவலரின் உறவினரின் காலில் விழுந்து கதறினார்.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 

 
யாழ்  மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான  பொலிஸ் சார்ஜன்ட் சரத் பிரேமசந்திர  உப பொலிஸ் பரிசோதகர் (SI) பதவி  உயர்த்தப்பட்டுள்ளார்.
 
நேற்று (22) மாலை  நீதிபதியின்   வாகனத்தை இடைமறித்து நடாத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த  அவருக்கு    உயிரிழந்த நிலையில் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 
 
 
நல்லூர் ஆலயப் பின் வீதி வழியாகப் பயணித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி  இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில்  மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
 
அவர்களில் பொலிஸ் சார்ஜன்ட் சரத் பிரேமசந்திர (58)  சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
 
இவர் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் கடமையாற்றி வந்துள்ளார்.
 
மேலும் இரு   மெய்ப்பாதுகாவலர்களின் அர்ப்பணிப்பான கடமையினால்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு  பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் 17 ஆண்டுகால நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர் சரத் பிரேமசந்திர (58) சிகிச்சை பலனின்றி இன்று (23)அதிகாலை யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்தார்.
 
 
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூர் ஆலயப் பகுதியில் நடைபெற்ற   துப்பாக்கி சூட்டில்   பொலிஸார் இருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 
இதன் போது   சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில்   வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த  நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சரத் பிரேமசந்திர (58) சிகிச்சை பலனின்றி   உயிரிழந்துள்ளார்.
 
 
இவரது (மெய்ப்பாதுகாவலர்) பிஸ்டலைப் பறித்தே சிவிலியன் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார். வலது வயிற்றுப் பகுதியால் உட்புகுந்த துப்பாக்கிச் சன்னம் இடது வயிற்றுப் பக்கத்தால் வெளியேறியுள்ளது. இதனால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குருதிக் கசிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாகவே நேற்று மாலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவர்கள் குழாமின் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அதிக குருதிப் போக்குக் காரணமாக நள்ளிரவு 12.20 மணியளவில் சரத் பிரேமசந்திர உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
 
இவர் நீதிபதி இளஞ்செழியனின் 17 ஆண்டுகால நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலராக இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 
இதேவேளை   நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அனலைதீவு பகுதியில்  பொலிஸாரினால் நேற்றிரவு (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 
இதில்  2011 ஆம் ஆண்டு கோப்பாயில் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரே துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய நபர் என பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 

Add new comment

Or log in with...