சர்ச்சைக்குரிய முறி; இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு (UPDATE) | தினகரன்

சர்ச்சைக்குரிய முறி; இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு (UPDATE)

 
அர்ஜுன் அலோசியஷின் கையடக்கலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள், பிணைமுறி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
 
கடந்த 2015 - 2016 காலப்பகுதியில் மத்திய வங்கியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பிணை முறி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று (24) குறித்த உத்தரவை வழங்கியிருந்தது. 
 

 

சர்ச்சைக்குரிய முறி; இலத்திரனியல் உபகரணங்களை கையளிக்க உத்தரவு

பேபர்ச்சுவல் ட்ரசரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸின் கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களை கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சர்ச்சைக்குரிய பிணைமுறி (Bond) விநியோகம் தொடர்பில் பிணைமுறி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 
குறித்த முறி விநியோக நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியான 2015 - 2016 இல் அர்ஜுன் அலோசியஸ் பயன்படுத்திய கையடக்க தெலைபேசி உள்ளிட்ட அனைத்து இலத்திரனியல் உபகரணங்களையும் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் (CID) கையளிக்குமாறு, ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...