காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் ஐ.நா. செயலர் பாராட்டு | தினகரன்

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் ஐ.நா. செயலர் பாராட்டு

 
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு அனுமதியளித்தமை தொடர்பில், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"தங்களது அன்புக்குரிய உறவினர்களை தேடிக் கொண்டிருக்கும் இலங்கையர்கள் அனைவருக்கும் அவர்கள் தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள இச்செயற்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது" என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 
"குறித்த விடயத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தங்களது முழு ஆதரவையும் வழங்கும் என்பதோடு, சுதந்திரமான ஆணையாளர்களை நியமிப்பதன் மூலம் இது (இந்த காரியாலயம்), மிக விரைவில் செயற்பாடு மிக்கதாக மாற்றமடையும் என செயலாளர் நாயகம் எதிர்பார்க்கிறார்" என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
 

Add new comment

Or log in with...