கடத்தல்; கைதான கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

கடத்தல்; கைதான கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

 
தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி தசநாயக்கவுக்கு ஓகஸ்ட் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
இன்று (19) கொழும்பு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தியபோது அவர் இவ்வுத்தரவை வழங்கினார்.
 
டி.கே.பி தசநாயக்க, குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் (12) வெலிசர கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
 

Add new comment

Or log in with...