உமா ஓயா திட்டம்; உபகுழு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு | தினகரன்

உமா ஓயா திட்டம்; உபகுழு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

 
உமாஓய வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று (18) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
 
இந்த விடயம் குறித்து ஆராய மூவரடங்கிய குழுவொன்று, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. 
 
மீன்பிடி அமைச்சர், மகாவலி அபிவிருத்தி இரஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான குறித்த குழு, அண்மையில் பண்டாரவளை பகுதிக்குச் சென்று பார்வையிட்டதுடன், பல விடயங்கள் குறித்தும் ஆராய்ந்திருந்தனர். 
 
இதற்கமைய, தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (18) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 
 
மேலும், உமாஓய வேலைத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த, விசேட அமைச்சரவைப் பத்திரமும் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. 
 
இதில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கல், நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் உள்டக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 

Add new comment

Or log in with...