சவூதியில் குட்டை பாவாடை பெண்ணைத் தேடி வேட்டை (VIDEO) | தினகரன்

சவூதியில் குட்டை பாவாடை பெண்ணைத் தேடி வேட்டை (VIDEO)

 

UPDATE...

குறித்த பெண்ணை தற்போது சவூதி அரேபியாவின் மத பொலிஸார் கைது செய்துள்ளதாக சவூதி அரேபியாவின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் குறித்த பெண்ணின் அனுமதியின்றி, அவருக்கு தெரியாமல் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகின்றது.


குட்டை பாவாடை மற்றும் கவர்ச்சியான மேலாடையுடன் பொது இடத்தில் தோன்றும் வீடியோ ஒன்றை சமூகதளத்தில் வெளியிட்ட இளம் பெண் ஒருவரை சவூதி அரேபிய நிர்வாகம் தேடி வருகிறது.

‘குலூத்’ என்று பெயர் குறிப்பிடப்பட்ட இந்த பெண் வரலாற்று முக்கியம் வாய்ந்த உஷைகிர் கோட்டையில் நடந்து செல்லும் வீடியோவையே வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, குறித்த வீடியோ முதன் முதலில் ஸ்நப் சட் (Snapchat) சமூக ஊடகத்தில் Khulood எனும் பயனர் கணக்கில் வெளியிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சவூதியின் கடுமையான ஆடை கட்டுப்பாடுகளை மீறிய இந்த பெண்ணை கைது செய்யும்படி சிலர் அழைப்பு விடுத்திருந்தனர்.

சவூதியில் பெண்கள் பொது இடங்களில் அபாயா என அழைக்கப்படும் முழு உடலை (முகம் உள்ளிட்ட / முகம் தவிர்ந்த) மறைக்கும் ஆடையுடன் தலையை மறைத்திருக்க கட்டுப்பாடுகள் உள்ளன.

நஜித் மாகாணத்தில் உள்ள வரலாற்று தலமான உசைகர் கோட்டையில் அந்த பெண் இந்த வீடியோவை எடுத்துள்ளார். நஜித், சவூதி அரேபியாவின் பழைமைவாத பிராந்தியங்களில் ஒன்றாகும். இங்கேயே சவூதியின் மத ஸ்தாபனமான வஹாபிசம் தோன்றியது.

சவூதியின் நல்லொழுக்கங்களை ஊக்குவிக்கும் தீயவற்றை தடுக்கும் மதப் பொலிஸார், இந்த வீடியோ தொடர்பில் குறித்த அதிகாரிகளை அறிவுறுத்தி இருப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது. 

 


Add new comment

Or log in with...