சிறைக்குள் உல்லாசமாய் சசிகலா; அம்பலப்படுத்திய பெண் அதிகாரி இடமாற்றம் | தினகரன்

சிறைக்குள் உல்லாசமாய் சசிகலா; அம்பலப்படுத்திய பெண் அதிகாரி இடமாற்றம்

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் அதிமுக பொதுச்செயலாளர் நைட்டியுடன் சுற்றி வந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து சசிகலா சிறைக்குள் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அதற்காக உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் சிறை அதிகாரி ரூபா உள்துறை, சிறைத்துறை டிஜிபிக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு உண்டானது.

இதனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார்.

 
 
சிசிடிவி காட்சிகள் அழிப்பு
 

CCTV காட்சிகள் அழிப்பு

இந்நிலையில் சிறையில் ஆய்வு செய்த சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண ராவ் உள்பட உயர் அதிகாரிகள் சிறையிலிருந்த சிசிவிடி காட்சிகளை அழித்து வருவதாக ரூபா இரண்டாவது அறிக்கையை அரசுக்கு எழுதினார். இந்த அறிக்கையையும் ஊடகங்களில் வெளியானது.

 
ரகசிய விசாரணை

ரகசிய விசாரணை

இதெல்லாம் ரூபாவிடமுள்ள ஆதாரங்கள்தான் என கூறப்படுகிறது. அவர்தான் மேலதிகாரிகளை நம்பாமல் ஊடகங்களில் கசியவிட்டுள்ளாரா என்ற கோணத்தில் முதல்வர் அறிவுரையின்பேரில் உளவுத்துறை அதிகாரிகளின் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.

 
5 அறைகள்

நைட்டி உடை

மேலும் மாலை நேரத்தில் சசிகலா நைட்டி உடையுடன் வலம் வரும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எந்த கைதிக்கும் இந்த வசதி செய்து தரப்படவில்லையாம். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சசிகலாவிற்கு எதிரான அனைத்து ஆதராங்களையும் திரட்டிய பிறகே அறிக்கையை எழுதியுள்ளார் ரூபா.

 
சலுகைகள் ரத்து
 

ரூபா

இந்த விவகாரம் அனலை கிளப்பியதற்கு நடுவே, ரூபா போக்குவரத்து துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் நேர்மையாக விசாரிக்கவில்லை என்றால், பரப்பன அக்ரஹார சிறைக்குள் நடந்த பல்வேறு முறைகேடுகள், கோடிகள் கைமாறிதற்கான ஆதாரங்களையும் மீடியாக்களில் வெளியிட ரூபாவின் தரப்பு தயாராகி வருகிறது.

இந்நிலையில் டிஐஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பெங்களூரு சிறையில் கைதிகள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

200க்கும் மேற்பட்ட கைதிகள் ரூபாவுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காலை உணவை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் பெங்களூர் சிறை விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.


Add new comment

Or log in with...