காத்தான்குடியில் கடை ஒன்று தீயில் எரிந்து நாசம் | தினகரன்

காத்தான்குடியில் கடை ஒன்று தீயில் எரிந்து நாசம்

 
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நதியா கடற்கரை மெரீன் ட்றைவ்வில் கடையொன்றிற்கு இனைந்தெரியாத நபர்கள் தீவைத்துள்ளமையால் குறித்த கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
 
இச்சம்பவம் இன்று (16) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
குளிர்பானம் மற்றும் உடனடி உணவு (பர்கர்) தயாரிக்கும் இக்கடை மூடப்பட்டிருந்த நிலையிலேயே தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 இலட்சம் ரூபாய் வரையான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கடை உரிமையாளர் காத்தான்குடி பொலிசி;ல் முறைப்பாடு செய்துள்ளார்.
 
 
கடை முற்றாக எரிந்துள்ளதுடன் மின் சாதனங்களும் எரிந்துள்ளமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
 
(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல்.ஜவ்பர்கான்)
 

Add new comment

Or log in with...