வெற்றி பெற 218 ஓட்டங்கள் அவசியம்; நாளை இறுதி நாள் (UPDATE) | தினகரன்

வெற்றி பெற 218 ஓட்டங்கள் அவசியம்; நாளை இறுதி நாள் (UPDATE)

 
இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையில், கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற இன்றும் 218 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது.
 
388 எனும் பாரிய ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காக கொண்டு ஆடியை இலங்கை அணி இன்றைய (17) நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை பெற்றது.
 
குசல் மெண்டிஸ் 60*
திமுத் கருணாரத்ன 49
உபுல் தரங்க 27
அஞ்சலோ மெத்திவ்ஸ் 17*
 
முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைப் பெற்ற சிம்பாப்வே அணி வீரர்
கிரேம் கிரீமர் 2/67
 

388: பாரிய ஓட்ட இலக்கை நிர்ணயித்தது சிம்பாப்வே

சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதே விளையாட்டு அரங்கில் இடம்பெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வெற்றி இலக்காக 388 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 377 ஒட்டங்களை பெற்று மிக வலுவான நிலையில் உள்ளது.
 
ஏற்கனவே இலங்கை அணியை விட 10 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 388 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.
 
இலங்கை அணி சார்பில் ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுகளை பெற்றார். அந்த வகையில் இப்போட்டியில் 11 விக்கெட்டுகளை ஹேரத் பெற்றுள்ளார்.
 
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர்கள் பட்டியலில்
 
ஸ்டுவர்ட் புரோட் (373), வக்கார் யூனுஸ் (373), மல்கம் மார்ஷல் (376), இயன் பொதம் (383) ஆகியோரை கடந்து 384 விக்கெட்டுகளை ஹேரத் பெற்றுள்ளார்.
 
சிம்பாப்வே 356 & 377 (107.1) 
சிக்கந்தர் ராசா 127
மல்கம் வொல்லர் 68
கிரேம் கிரீமர் 48
 
இலங்கைக 346 & 11/0 (5.0 ov)
 

Add new comment

Or log in with...