தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டும் | தினகரன்

தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டும்

தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை நிலைநிறுத்த முடியும். பொலிஸ் சேவைக்காக 500 வெற்றிடங்கள் உள்ளன. அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.

பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர், யுவதிகளின் ஆளணி பற்றாக்குறையாக உள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியதாக முதலமைச்சர் கூறினார்.

தமிழ் பொலிஸார், பொலிஸ் சேவையில் இணைக்கப்பட வேண்டும். பொலிஸ் சேவையில் இணைவதற்கு தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வரவில்லை. இதுவரை காலமும் பொலிஸ் மீதான அபிப்பிராயம் தப்பாக இருந்துள்ளது. தமிழ் பொலிஸாரின் தற்போது 500 வெற்றிடங்கள் இருப்பதாகவும், அந்த வெற்றிடங்கள்களை வைத்து பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான முயற்சிகளை எமது இளைஞர் மற்றும் யுவதிகள் எடுக்க வேண்டும். வேலையற்ற பட்டதாரிகள் கூட உயர் பதவிகளை வகிப்பதற்காக முன்வர வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...