குருநாகல் கெகுணகொல்ல மாணவர்கள் இருவர் உயிரிழப்பு | தினகரன்

குருநாகல் கெகுணகொல்ல மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

 
குருணாகல் - கெகுணகொல்ல மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனரென சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
 
அறக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரியைச் சேர்ந்த குறித்த மாணவர்கள், நேற்று  (15) மாவிலாறு குளத்தில் தோணியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
 
கெகுணகொல்ல - அறக்கியால பகுதியைச் சேர்ந்த எம்.என்.எம். அப்துல்லாஹ் (11) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18) ஆகியோரே இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
 
குறித்த அரபிக்கல்லூரி மாணவர்கள் மூதூர் சென்றுள்னர். இதன்போது மாவிலாறு குளத்தைப் பார்வையிட சென்ற இவர்கண்,  தோணியில் பயணித்ததாகவும் அதனையடுத்து, தோணி கவிழ்ந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
 
உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (16) மேற்கொள்ப்பட்டது.
 
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  
 
(கந்தளாய் தினகரன் நிருபர் - எப்.முபாரக்)
 
 

Add new comment

Or log in with...