லேக் ஹவுஸ் தலைவர் சுற்றுலா சபையின் தலைவராக நியமனம் | தினகரன்


லேக் ஹவுஸ் தலைவர் சுற்றுலா சபையின் தலைவராக நியமனம்

 
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் காவன் ரத்நாயக்க, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்பில் செயற்படும் மிக உயர்ந்த நிறுவனமாகும். அதன் அடிப்படையில் தேசிய சுற்றுலா திட்டமிடல் தொடர்பான விடயங்கள், காவன் ரத்நாயக்கவிடம் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
 
தனியார் துறையில் மிகச் சிறந்த முகாமைத்துவத்தை கொண்டுள்ளவராக கருதப்படும் ரத்நாயக்க, கடந்த இரு வருடங்களாக லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு தலைமைத்துவம் வழங்கினார்.
 
நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதியாக்கிய அவர், லேக் ஹவுஸ் பத்திரிகைகள் சமூகத்தில் மீண்டும் நன்மதிப்பை பெறுவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
 
 
ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான காவன் ரத்நாயக்க, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் BSc (Physics) பட்டம் பெற்றுள்ளார். 
 
அவர், கடந்த 1998 முதல் 2007 வரை IBM நிறுவனத்திற்கான இலங்கைக்கான பொது முகாமையாளராகவும், டயலொக் புரோட் பேண்ட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும், டயலொக் ஆசியாட்டா மற்றும் கார்கில்ஸ் நிறுவனங்களின் தலைமை நிறுவன அதிகாரியாகவும் செயற்பட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 

Add new comment

Or log in with...