‘லாகூர் தாக்குதல், 2011 உலகக்கிண்ண இறுதி போட்டி தொடர்பாகவும் விசாரணை நடத்துங்கள்’ | தினகரன்

‘லாகூர் தாக்குதல், 2011 உலகக்கிண்ண இறுதி போட்டி தொடர்பாகவும் விசாரணை நடத்துங்கள்’

2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் நகரத்தில் இலங்கை கிரிக்கட் அணி மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும் 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ணப் போட்டி தொடர்பாகவும் விசாரனை மேற்கொள்ளப்படவேண்டும் என்று முன்னாள் இலங்கை டெஸ்ட் கிரிக்ெகட் அணியின் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.

(13) காலையில், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இடப்பெற்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் இது குறித்து தெரிவிக்கையில் 'விளையாட்டு வீரர்கள் வெள்ளை சீருடை அணிந்து விளையாடினாலும் அவர்களது எண்ணம் வேறுவிதத்தில் உள்ளது என்பதை நான் அறிவேன்.

இப்போது சங்கக்கார விசாரணை நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார். அதைத்தான் நானும் சொல்கின்றேன். 2009 இடம்பெற்ற கிரிக்ெகட் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை கிரிக்கட் சபையின் பொறுப்பாளராக செயற்பட்டவர் விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் சி.எஸ் லியனகே .

சில மாதங்களுக்கு பிறகு நான் ஆசிய கிரிக்ெகட் சபையின் தலைவரானேன். ஆசியப் போட்டி பாகிஸ்தானில் இடம்பெற்றது. அது நன்றாக இருந்தது. அதன் பின் வந்தவர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும். என்று சாலி ஒஸ்டின் அணியிலிருந்து சொன்னார்கள்.

அப்போது நான் நாட்டை காட்டிக்கொடுக்க தயாரில்லை என நிராகரித்துவிட்டேன். அதன்பின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காமினி லொகுகே என்னை கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். அதன் பின்னர்தான் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இடம்பெற்றது. இதன்போதே இலங்கை அணி பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளானது. நான் நினைப்பது அது பற்றி விசாரனை இடம்பெறவேண்டும். ஆனால் மறந்துவிடாதீர்கள்

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரும் பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆசிய கின்னப் போட்டியில் எமது வீரர்கள் கலந்துகொண்டனர். எனது காலத்தில் வீரர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். ஆனாலும் ஆசிய கிண்ணப் போட்டியின் போது நான் தனிப்பட்டமுறையில் அவர்களை பாதுகாக்க ஆட்களை அனுப்பினேன்.

பாகிஸ்தானில் இடம்பெற்ற 96ஆண்டு உலகக்கின்னத்தின் போது தனது நாட்டுவீரர்களின் அரைவாசிப்பேர் இந்திய வீரர்களோடும் எமது வீரர்களோடும் வந்தனர். அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. கிரிக்கெட் அடிக்கமுடியும் என்று உலகுக்கு காட்டினோம். அதையும் அவதானிக்கவேண்டும். பாகிஸ்தான் எமக்கு நட்பு நாடு. அது பற்றி தொரியாமல் எமது வீரர்கள் ஒவ்வொரு கதைகளை சொல்லுகின்றனர்.

ஆனால் இந்தியாவில் தான் விடுதலைப்புலிகளின் ஆபத்து எமக்கு இருந்தது. ஆனாலும் வீரர்களை இந்தியாவுக்குப் போகவேண்டாம் எனக்கூறவில்லை. அவர்களுக்குத் நன்கு தெரியும் போகமுடியாது என்றால் ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமென்று. ஐ.பி.எல் போட்டி இடம்பெற்றவேளையில் குண்டுவெடித்தாலும் அது வீரர்களுக்குத் தெரியாது.

காரணம் எமது வீரர்களுக்கு விளையாட்டுத்தான் முக்கியம். ஆனால் அவர்களது முகாமையாளர்களுக்கோ பணம் சம்பாதித்துக் கொடுப்பவர்கள் பற்றிய ஒரு முக்கியத்துவமுமில்லை. தற்போது கிரிக்கெட் வீழ்ந்துவிட்டது. அது பற்றி யாறும் கதைப்பதுமில்லை கவலைப்படுவதுமில்லை. ஆனால் தமது முகாமையாளர்களை காப்பாற்ற தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர் சிலவீரர்கள். நான் சொல்வது இதற்கு ஒரு புதிய சட்டவிதிகளை கொண்டுவரவேண்டும்.

 ஏஜன்டுக்கு (தரகர்களுக்கு) மூன்று வீரர்கள் என்ற நீதியை கொண்டுவரவேண்டும். எனக்கு தெரிந்த விதத்தில் ஒரு அணிக்கு சாலி ஒஸ்டின் என்ற தரகர் தலையிட்டுள்ளார். இவர் பிறந்தநாட்டில் இருந்து வந்தவர். அவர் இந்த நாட்டில் வரி செலுத்தியுள்ளாரா? அது பற்றி தேடவேண்டியுள்ளது. நான் எந்த வீரரையும் தறைகுறைவாக நினைக்கவில்லை. ஆனால் வெள்ளை ஆடைணிந்தாளும் உள்ளே என்ன உள்ளது என எனக்குத் தெரியும்.' என்று அமைச்சர் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...