வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நங்கூரம் விளையாட்டு கழகத்தின் கண்காட்சி போட்டிகள் | தினகரன்

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நங்கூரம் விளையாட்டு கழகத்தின் கண்காட்சி போட்டிகள்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வீரமக்கள் தினத்திற்கான கண்காட்சி போட்டிகள் நேற்று மாலை வவுனியா நெளுக்குளம் ஊர்மிளா கோட்ட மைதானத்தில் நடைபெற்றது.

கண்காட்சி போட்டியில் புளொட் அமைப்பின் மறைந்த உப தலைவர் அமரர் தோழர் நா.மாணிக்கதாசன் ஞாபகார்த்த கண்காட்சி வெற்றிக் கிண்ணங்களின் போட்டியில் நியூ பைட் விளையாட்டுக் கழகம் எதிர் ஏபிசி விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

புளொட் அமைப்பின் மறைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தோழர் த.சண்முகநாதன்(வசந்தன்) ஞாபகார்த்த கரப்பந்தாட்ட கண்காட்சி போட்டியில் சுப்பர் ஸ்ரார் எதிர் யங் பைற் அணிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப தலைவருமான திரு க.சந்திரகுலசிங்கம், ஈரோஸ் அமைப்பின் தலைவர் ச. துஷ்யந்தன், புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு.சு.ஜெகதீஸ்வரன், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.விஸ்வநாதன், ரி-மொபைல் உரிமையாளர் செந்தில் மற்றும் கழகத்தின் தோழர்கள் ஆதரவாளர்களுடன் இளைஞரணியும் கலந்து சிறப்பித்தார்கள்.

வவுனியா விசேட நிருபர் 


Add new comment

Or log in with...