நிந்தவூர் கென்ற் கழகத்தினால் பாறூக் கௌரவிப்பு | தினகரன்

நிந்தவூர் கென்ற் கழகத்தினால் பாறூக் கௌரவிப்பு

அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையில் நிந்தவூர் கென்ற் விளையாட்டுக் கழகத்தினால் விரைவில் நடாத்தப்பட விருக்கின்ற கென்ற் கிக் -2017 உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் போட்டி அட்டவணைகளை போட்டியில் பங்குபற்றுகின்ற கழகங்களுக்கு வழங்கும் வைபவம் அண்மையில் நிந்தவூர் தோப்புக்கண்ட உணவு விடுதியின் கேட்போர் கூடத்தில் கழகத்தின் தலைவர் பிரதம பொலிஸ் பரிசோதகர் எம். எல். றபீக் தலைமையில் நடைபெற்றபோது வைபவத்தின் ஒரு அங்கமாக அண்மையில் நடைபெற்ற இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் உப தலைவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் என். ரீ.பாறூக் அவர்களைபாராட்டிகௌரவிக்கும் வைபவம் சிறப்பாகநடந்தேறியது. மேற்படி நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ. எம். றகீப்,பொதுச்செயலாளர் ஏ. எம். இப்றாஹீம்,பொருளாளர் எம். ஐ. எம். ஏ மனாப், சிரேஷ்ட உப தலைவர் யூ.எல். றமீஸ் உபதலைவர்களான எஸ். எம். கான்,எம்.எல்.எம். ஜமால்தீன்,கென்ற் விளையாட்டுக்கழகத்தின் உயர்பீட உறுப்பினர் ஹபீப் வங்கி முகாமையாளர் அன்வர்டீன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனை சுழற்சி நிருபர் 


Add new comment

Or log in with...