60 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் | தினகரன்

60 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள 60 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

பாக்கு நீரிணைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பிடித்துச் செல்லப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத சம்பவங்கள் குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

 இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி தளத்திலிருந்து இரண்டு இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் கடந்த 12 ஆம் திகதியன்று அதிகாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...