நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் | தினகரன்

நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

திலீப் கைது விவாகரத்தில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை பகிரங்கமாக பயன்படுத்தியதற்காக நடிகர் கமலுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. ''இந்த நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்கள் ஆபாசமான வார்த்தைகளை பேசி வருகின்றனர். ஆபாச ஆடையுடன் வருகின்றனர். இது தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு எதிரானதாக இருக்கிறது. எனவே இதை தொகுத்து வழங்கும் நடிகர் கமலை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து கமல் கொடுத்த விளக்கத்தின் போது, “தமிழக அரசில் எல்லாத்துறையிலும் ஊழல் பெருகி உள்ளது.” என பதிலளித்தார். நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வலியுறுத்தி, சென்னையில் அவரது வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்காக கமல் வீடு முன்பு பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் திலீப் கைது விவாகரத்தில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை பகிரங்கமாக பயன்படுத்தியதற்காக நடிகர் கமலுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Add new comment

Or log in with...