கை விரலின் இடத்தில் கால் விரலை பொருத்திய இளைஞன் | தினகரன்

கை விரலின் இடத்தில் கால் விரலை பொருத்திய இளைஞன்

அவுஸ்திரேலிய கால்நடை தொழிலாளி ஒருவர் காளை ஒன்றினால் துண்டிக்கப்பட்ட தனது கட்டை விரலுக்கு பதில் அந்த இடத்திற்கு அறுவைச் சிகிச்சை மூலம் தனது கால் பெருவிரலை பொருத்திக்கொண்டுள்ளார்.

மேற்கு அவுஸ்திரேலியாவின் ஒரு பின்தங்கிய பண்ணையில் பணியாற்றும்போதே 20 வயதான சக் மிச்சலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் காயம் ஏற்பட்டுள்ளது. “காளை ஒன்று எனது கையை வேலி மீது முட்டியது” என்று சம்பவம் குறித்து அவர் கூறினார்.

அவரது கட்டை விரலை மீண்டும் பொருத்துவதற்கு இரு முறை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவை வெற்றி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்தே மருத்துவர்கள் எட்டு மணிநேர சத்திரசிகிச்சை மூலம் இளைஞனின் கால் விரலை கைவிரலின் இடத்திற்கு பொருத்தியுள்ளனர்.

“நோயாளிகள் தனது உடலின் மற்றொரு இடத்தில் காயம் ஏற்படுவதை விரும்பாத நிலையில் இது சற்று பைத்தியக்கார யோசனை” என்று இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் சீன் நிக்லின் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...