வியாழன் சிவப்பு புள்ளியின் படங்கள் வெளியீடு | தினகரன்

வியாழன் சிவப்பு புள்ளியின் படங்கள் வெளியீடு

வியாழன் கிரகத்தின் பெருஞ்சிவப்பு பிரதேசத்தை ​ெநருங்கிய நாசாவின் ஜுனோ விண்கலம் அதன் அதிர்ச்சி தரும் படைங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.

கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக வியாழனை அவதானித்து வரும் இந்த விண்கலம் அந்த கிரகத்தின் அடையாளமாக இருக்கும் பெருஞ்சிவப்பு பிரதேசத்திற்கு சுமார் 5,600 மைல்கள் (9,000 கிலோமீற்றர்கள்) மேலால் திங்களன்று கடந்து சென்றது. இந்நிலையில் விண்கலம் நெருங்கியபோது பிடிக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் கடந்த புதனன்று வெளியிட்டது. இந்த படங்களின் காட்சி மலைப்பூட்டுவதாக உள்ளதென நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பெருஞ்சிவப்பு பிரதேசம் வியாழனுக்கு மிகப்பெரிய சிவப்புக்கண் உள்ளது போன்ற தோற்றத்தை தருகிறது. 26,000 கி.மீ நீளமும் 12,000 கி.மீ அகலமும் உடைய இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசத்தில் இரண்டு பூமிகளை வைக்கலாம். இதன் சிவப்பு நிறம் கருங்கல் சிவப்பிலிருந்து பழுப்பு வரை மாறிக்கொண்டே இருக்கும்.

வியாழனில் தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கும் இராட்சத புயலான இந்த சிவப்புப் புள்ளி, 300 ஆண்டுகளாக அவதானிக்கப்பட்டு வருகிறது.


Add new comment

Or log in with...