தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | தினகரன்

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

 
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கோபாலகிருஸ்ணன் வீதியிலுள்ள வீடொன்றிலேயே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
 
இச்சம்பவம் இன்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான ரொயேஸ் ரொனிலா என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
 
கழுத்தை பலமாக பாரிய கயிற்றினால் இறுக்கி கட்டி தொங்கியவாறு குறித்த பெண்ணின் சடலம் காணப்பட்டது.
 
காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
 
 
(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல்.ஜவ்பர்கான்)
 
 

Add new comment

Or log in with...