அஞ்சலோ மெத்திவ்ஸின் இடத்திற்கு தரங்க, சந்திமால் | தினகரன்

அஞ்சலோ மெத்திவ்ஸின் இடத்திற்கு தரங்க, சந்திமால்

 
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்களாக உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ், அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
 
டெஸ்ட், ஒரு நாள், ரி20 ஆகிய மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவர் தலைமை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை கிரிக்கெட் அணி அண்மையில் இடம்பெற்ற பல்வேறு போட்டிகளிலும் சோபிக்கத் தவறியிருந்ததோடு, ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் 11 ஆம் இடத்திலிருந்த சிம்பாப்வே அணி, இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடரை 3-2 என கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறான தோல்விகள் காரணமாக, எதிர்வரும் 2019 இல் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டித் தொடருக்குள் நேரடியாக செல்லும் வாய்பை இழக்கும் நிலையில் இலங்கை அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்
 
  போட்டிகள் வெற்றி தோல்வி
டெஸ்ட் 34 13 15
ஒருநாள் 98 47 45
ரி20 11 04 07
 
அந்த வகையில் தற்போது இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் சந்திமால், நாளை மறுதினம் (14) சிம்பாப்வே உடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் தனது தலைமைத்துவ பொறுப்பை ஆரம்பிக்கவுள்ளார்.
 
இதேவேளை, ஒரு நாள், ரி20 அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உபுல் தரங்க, இலங்கை வரவுள்ள இந்தியாவுடன், எதிர்வரும் ஜூலை 26 - செப்டெம்பர் 06 வரை இடம்பெறவுள்ள போட்டித் தொடரின் ஓகஸ்ட் 20 இல் இடம்பெறவுள்ள ஒரு நாள் தொடரில் தனது தலைமைத்துவ பொறுப்பை ஆரம்பிக்கவுள்ளார்.
 
 

Add new comment

Or log in with...