சிரியாவில் யுத்த நிறுத்தம் பெரும்பாலும் கடைப்பிடிப்பு | தினகரன்

சிரியாவில் யுத்த நிறுத்தம் பெரும்பாலும் கடைப்பிடிப்பு

சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தில் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்த 24 மணி நேரத்தில் வட மேற்கு சிரியாவின் மூன்று மாகாண முன்னரங்குகளில் அமைதி நிலவுவதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் டெரா, சுவைதா மற்றும் குனைத்ரா மாகாணங்களில் சிறு சிறு மோதல்களே பதிவானதாக சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இடையிலான சந்திப்பை அடுத்தே அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜோர்தான் நாடுகளுக்கு இடையில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இணக்கம் எட்டப்பட்டது.

இந்நிலையில் சிறு சிறு சம்பவங்களை தவிர்த்து யுத்த நிறுத்தம் பெரும்பாலும் கடைப்பிடிப்படுவதாக கண்காணிப்பாளர்கள குறிப்பிட்்டுள்ளனர்.

ஜெனீவாவில் புதிய சுற்று அமைதி பேச்சுவார்த்தை நேற்று ஆரம்பமான நிலையிலேயே இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

2011ஆம் ஆண்டு சிரியாவில் சிவில் யுத்தம் ஆரம்பமானது தொடக்கம் இவ்வாறான உடன்படிக்கைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அவை அனைத்தும் தோல்வி அடைந்து மீண்டும் யுத்தம் வெடித்தது. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் 320,000க்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர். 


Add new comment

Or log in with...