ரியோ அடிமைகள் துறைமுகம் யுனெஸ்கோ தளமாக பிரகடனம் | தினகரன்

ரியோ அடிமைகள் துறைமுகம் யுனெஸ்கோ தளமாக பிரகடனம்

சுமார் ஒரு மில்லியன் ஆபிரிக்க அடிமைகள் வந்திறங்கியதாக கணிக்கப்படும் பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோ நகர கப்பல்துறை மேடை உலக மரபுரிமை தளமாக யுனெஸ்கோ பெயரிட்டுள்ளது.

மூன்று நூற்றாண்டுகளாக இயங்கி வந்த வலொன்கோ கப்பல்துறை மேடை, பிரேஸிலுக்கு அழைத்துவரப்படும் ஆபிரிக்க அடிமைகளின் மிகப்பெரிய நுழைவாயிலாக இருந்து வந்தது.

2016 ஒலிம்பிக் புனர்நிர்மாணப் பணிகளின் போதே இதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்காஸில் ஆபிரிக்க அடிமைகளுக்கான பிரதான மையமாக பிரேஸில் இருந்து வந்தது.

அட்லாண்டிக் கடலை கடக்கும் நீண்ட பயணத்திற்கு பின் வலொன்கோ கப்பல்துறை மேடையை அடையும் ஆபிரிக்க அடிமைகள் அங்கு தங்க வைக்கப்பட்டு உடல் நலமடைந்து, உடல் எடை போட்ட பின் அடிமை சந்தைகளில் விற்கப்படுகின்றனர்.

இதில் பெரும்பாலான அடிமைகள் உயிர் பிழைப்பதில்லை என்பதோடு அவர்களது உடல்கள் அருகில் உள்ள கல்லறையில் அடக்கப்பட்டுள்ளனர்.

ஹிரோஷிமா மற்றும் அஸ்விட்ஸ் போன்று வலொன்கோ கப்பல்துறை மேடையும் வரலாற்றில் அதே இடத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது. மனித இன வரலாற்றில் மறக்கக் கூடாத வரலாற்றின் ஓர் அங்கமாக இது இருப்பதாகவும் ஐ.நா கலாசார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 


Add new comment

Or log in with...