இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக ரவி சாஸ்த்திரி | தினகரன்

இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக ரவி சாஸ்த்திரி

 
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
 
குறித்த நியமனம் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கோப்பைத் தொடர் வரை நீடிக்கும் என சபை (BCCI) தெரிவித்துள்ளது.
 
அந்த வகையில் அவரது முதலாவது பணியாக, ஜூலை 26 இல் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையிலேயே அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கங்குலி, சச்சின் மற்றும் லக்ஷ்மன் அடங்கிய ஆலோசனைக் குழுவே அடுத்த பயிற்சியாளரை முடிவு செய்யும் என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாகூர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
 
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி அனில் கும்ப்ளே பற்றி பேசிய கருத்துகள் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே, பயிற்சியாளரைத் தேர்வு செய்வது தொடர்பில் விராத் கோலியிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று ஏற்கெனவே கங்குலி தெரிவித்திருந்தார். 
 
குறித்த பதவிக்கு முன்னாள் இந்திய அணி வீரர்கள் ரவி சாஸ்திரி, விரேந்திர சேவாக் உள்ளிட்ட ஆறு பேர் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...