இரட்டை சதமடித்து ஆப்கான் வீரர் சாதனை | தினகரன்

இரட்டை சதமடித்து ஆப்கான் வீரர் சாதனை

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷபீகுல்லா ஷபாக், ரி-ருவென்ரி கிரிக்கெட் அரங்கில் இரட்டை சதமடித்து புதிய உலகசாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில், (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சபாகின் அணிக்கெதிரான போட்டியில், கடீஜ் அணி சார்பில் வினையாடிய ஷபீகுல்லா ஷபாக், 71 பந்துகளில் 21 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடங்கலாக 214 ஓட்டங்களை குவித்தார்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கடீஜ் அணி, ஷபாக்கின் இரட்டை சத உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 351 ஓட்டங்களை குவித்தது.

இதனைதொடர்ந்து களமிறங்கிய சபாகின் அணி, கடீஜ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடீஜ் அணி அபார வெற்றிபெற்று சரித்திரத்தில் இடம்பிடித்தது. 


Add new comment

Or log in with...