சிறுபோக நெற்செய்கை அறுவடை ஆரம்பம் | தினகரன்

சிறுபோக நெற்செய்கை அறுவடை ஆரம்பம்

 
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
கடந்த  ஏப்ரல் மாதம் அளவில் விதைக்கப்பட்ட வயற் செய்கையின் அறுவடையே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
கடந்த வருடம் அம்பாறையில் 95 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் நிலவிய வரட்சி காரணமாக தற்போது 40 ஆயிரம் ஏக்கரே இவ்வாறு அறுவடைக்காக தயார் செய்யப்பட்டுள்ளது.
 
 
சில பிரதேசங்களில் நெற்செய்கையுடன் இணைந்து உப உணவுப் பயிர்ச் செய்கையும், சில பிரதேசங்களில் உப உணவுப் பயிர்ச் செய்கை மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லினை விற்பனை செய்வதில் விலைகளில் தளம்பல் நிலை காணப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர் 
 
(ஆலையடிவேம்பு சுழற்சி நிருபர் - என்.ஹரன்)
 

Add new comment

Or log in with...