கதிராமங்கலம் கூட்டத்தில் பேசிய வைகோ திடீர் 'மயக்கம்' | தினகரன்

கதிராமங்கலம் கூட்டத்தில் பேசிய வைகோ திடீர் 'மயக்கம்'

கதிராமங்கலத்தில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை கண்டித்து கதிராமங்கலத்தில் பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முதலில் பேரணியில் பங்கேற்று பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசத் தொடங்கினார்.

மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

பின்னர் சுதாரித்து எழுந்த வைகோ, தண்ணீர் குடித்து விட்டு மீண்டு தனது உரையைத் தொடர்ந்தார். 


Add new comment

Or log in with...