கல்வித்துறையில் பெருமை மிகுந்த பொருளாதார விஞ்ஞானி | தினகரன்

கல்வித்துறையில் பெருமை மிகுந்த பொருளாதார விஞ்ஞானி

(கலாநிதி சமன் கலேகம)

கடந்த 23 ஆம் திகதி அகால மரணமடைந்த கலாநிதி சமன் கலேகம அவர்களின் மறைவு அதிர்ச்சியளித்து பலரதும் மனங்களை கவலைக்குள்ளாக்கியது.

பொருளாதார விஞ்ஞானி ஒருவருக்காக சமுதாயத்தில் பல்வேறு தரப்பினரும் இந்தளவு கவலைப்பட்டதை நான் இதுவரையில் காணவில்லை. கலாநிதி கலேகம மிகவும் அமைதியான, நட்புடன் பழகக் கூடிய, அகங்காரமில்லாத மனிதர்.

அனைவரது மரியாதைக்கும் உரியவர். கலாநிதி கலேகம பொருளாதார விஞ்ஞானியாக இலங்கை மற்றும் சர்வதேச மட்டத்திலும் பிரகாசித்தவர். ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் சிறப்புப் பயிற்சியும் பெற்று இருந்தார். அத்துடன் இந்த நாட்டின் சிறந்த ஒரு அறிஞர். சிவில் உத்தியோகத்தரான தேசமான்ய கலாநிதி ஜே.பீ.கலேகமஇவரின் தந்தையாவார். தந்தையின் வழியில் சென்று மத்திய வங்கியில் இணையாமல் இருந்தார்.

திறைசேரி போன்ற துறைகளையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை. மதியுரையகம் பற்றிய விழிப்புணர்வு இலங்கையில் மிக குறைந்தளவில் காணப்பட்ட காலத்தில் இலங்கை கொள்கைகள் கற்கை நிறுவனத்தை தேர்ந்தெடுத்தார். 1995ஆம் ஆண்டில் இருந்து அவரின் இறப்பு வரைக்கும் IPS க்கு தலைமை தாங்கியதுடன் அவருக்கான ஒரு அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். அத்துடன் IPSநிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கினார். மதியுரையகம் அல்லது கொள்கை நிலையம் என்னும் வார்த்தை பாவனைக்கு வருவதற்குக் காரணமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

இலங்கை கொள்கைகள் கற்கை நிறுவனத்தில் முன்னோடியாக இருந்ததில்லை என்றாலும், இலங்கையில் பொருளாதார மற்றும் அதனுடன் தொடர்புடையஅ னைத்துத் துறைகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மற்றும் கொள்கைகள் பற்றிய வழிமுறைகளை வழங்கும் நிறுவனமாக உருவாக இவர் காரணமாக இருந்தார். 1977ஆம் ஆண்டு திறந் தபொருளாதாரத்துடன் நடந்த திடீர் பொருளாதார மாற்றங்களுடன் சில வருடங்களுக்கு பிறகு IPS நிறுவனம் உருவாகியமை இந்தநாட்டின் சமகால வரலாற்றின் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது. கலாநிதி கலேகம IPS நிறுவனத்தில் ஆய்வாளராக 1990ம் ஆண்டு தன்னுடைய ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினார்.

அக்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசின் இறுதிக் காலப் பகுதியில் திறந்த பொருளாதார மற்றும் மாறுபட்ட அமைப்புகளின் காரணமாக சில புதிய மாற்றங்களை காணக் கூடியதாக இருந்தது. 1994 இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணியை நிறுத்தி 17வருடங்களாக கோலோச்சிய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை தோற்கடித்து, சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்கவின் தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். இந்த மாற்றத்துடன், கலேகம 1995ம் வருடத்தில் IPS நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அக்காலப் பகுதியில் முக்கிய மாற்றங்கள் இலங்கையில் நடந்தன. டோனிப்லேயரின் தலைமையில் ஐக்கிய இராச்சியத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் நடந்தன. கொமியுனிச நாடுகளில் மற்றும் சீனாவில் ஏற்பட்ட மாற்றங்களினால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் குறிப்பிட்டளவிலான மாற்றங்கள் நடந்தன. ப்லேயரின் தொழிலாளர் கட்சி 'இளஞ்சிவப்பு' நிறத்துக்கு மாறியதுடன் சந்திரிகா குமாரதுங்கவின் புதிய கொள்கைகளினால் 'திறந்த பொருளாதாரத்தில் ஒரு மனிதாபிமானம்' என்கிற கருத்து அரசியல் அகராதியில் உள்ளடக்கப்பட்டது. இதனால் சிறியளவிலான கொமியுனிச கட்சிகள் மக்கள் முன்னணி அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கின.

இவ்வரலாற்றில் 1970 – 77ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கையை,சோசலிச அம்சங்களை காண்பித்த இலங்கை சுதந்திரக் கட்சி ஏற்றுக் கொண்டது.பட்டது. இலங்கை திறந்த பொருளாதாரத்துக்குப் பிறகு நிறுவனமாக ஆரம்பித்தது IPS நிறுவனம் மட்டுமல்ல, கொமியுனிச பார்வையுடைய நிபுணர்கள் 1977ஆம் ஆண்டில் சமூக விஞ்ஞானிகள் சங்கம் ஆரம்பித்தார்கள். சட்டத்தரணி கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களின் முன்னோடியில் இன்னுமோர் இன கற்கைகளுக்கான சர்வதேச அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இன நெருக்கடியினால் இலங்கை அறிவு கலந்துரையாடல் விமர்சனத்துக்குள் உள்வாங்கப்பட்டது. சமூக விஞ்ஞானிகள் சங்கமும் , இன கற்கைகளுக்கான சர்வதேச அமைப்பும் போல சில முன்னோடியான ஆராய்ச்சி நிறுவனங்கள் 1971 அருட்தந்தை திஸ்ஸ பாலசூரிய ஆரம்பித்த சமூகம் மற்றும் மதம் நிலையம் ,போல் கஸ்பர்ஸ் மற்றும் பிஷோப் லியோ நாணயக்கார 1972ம் ஆண்டில் ஆரம்பித்த 'சத்யோதய' போன்ற நிறுவனங்கள் மனித உரிமைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் நல்லிணக்கம், மோதல்கள் தொடர்பாக முக்கிய கவனத்தை செலுத்தின.

புதிய பொருளாதார கொள்கைகள் உருவாகிய காலத்தில் IPS நிறுவனம் சிந்தனைத் தாங்கியாக பிரசித்தி பெற்றது. அரசுடன் இணைந்த நிறுவனமாக IPS நிறுவனத்தை நிலைநாட்டியதனால், அரச, பல தரப்பு சார்பில் மற்றும் நிதி நிறுவனங்களில் நம்பிக்கையை இந்நிறுவனம் பெற்றெடுத்தது. அரசுடன் இணைந்த நிறுவனமாகக் இருந்தாலும் சுயாதீனமான நிறுவனமாக இது செயற்பட்டமையால், கலாநிதி கலேகம அறிவு பங்களிப்பினை வழங்கக் கூடியதாக இருந்தது.

வர்த்தகம், இடம்பெயர்வு, தொழிலாளர் மற்றும் பிறதொழில் பிரிவுகளில் கொள்கைகள், அடிப்படையான ஆராய்ச்சிகள் மூலம் அரச நிறுவனங்கள், பன்முக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதிநிறுவனங்களுக்கு தேவையான அறிவு பரிமாற்றப்பட்டது. அதனூடாக பொதுமக்களின் கலந்துரையாடலும் பலப்படுத்தப்பட்டது. கலாநிதி கலேகம பற்றிய கௌரவமான ஒரு சித்திரம் எனக்குள் இருக்கின்றது. அவரின் அறிவு மற்றும் பொறுமையினால் நிபுணராகவும், பேச்சாளராகவும் சமநிலையில் பணியாற்ற அவரால் முடிந்தது.

(கலாநிதி உதன் பெர்னாண்டோ)


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...