சிம்பாப்வே கிரிக்கெட் வீரர் வைத்தியசாலையில் | தினகரன்

சிம்பாப்வே கிரிக்கெட் வீரர் வைத்தியசாலையில்

 
சிம்பாபே கிரிக்கெட் அணி வீரர் ரையன் பேர்ல் (Ryan Ponsonby Burl) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
நேற்று (05) இரவு ஹோட்டலில் உட்கொண்ட உணவு ஒவ்வாமைக்குள்ளாகியதால் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
ஹம்பாந்தொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நிலையில் அதிக பாதிப்பு  இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
இலங்கை வந்துள்ள சிம்பாப்வே அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருவதோடு, இன்று (06) 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...