கருப்பையில் சூடு பட்ட குழந்தை உயிர் தப்பியது | தினகரன்

கருப்பையில் சூடு பட்ட குழந்தை உயிர் தப்பியது

கருப்பையில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரேஸில் நாட்டு குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளது. தாய் சன்டோஸ் மேலோவு, ரியோ டி ஜெனிரோவின் பவெலா நகரில் வைத்து துப்பாக்கி சண்டை ஒன்றுக்கு இடையில் சிக்கியபோது அவர் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஆண் குழந்தையான அர்துர் அவசர சிசேரியன் முறையில் பிறந்தபோது உடலியக்க குறைபாடு கொண்டதாக இருந்தது. எனினும் அந்த குழந்தை சுகம்பெறும் என்று குடும்பத்தினர் நம்புகின்றனர்.

குழந்தை பிரசவத்திற்கு முன் குழந்தைக்கான ஆடைகளை பெறுவதற்கு சென்றபோது மேலோவுவின் இடுப்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பிறக்காத குழந்தையை தாக்கியுள்ளது. இதனால் குழந்தையின் முதுகெலும் உட்பட பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை சுயமாக சுவாசிக்கக் முடியுமான ஸ்திரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

பிரேஸில் நகரங்களில் குற்ற கும்பல்களின் துப்பாக்கிச் சண்டைக்கு இடையில் சிக்கி உயிரிழப்புகள் இடம்பெறுவது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. 


Add new comment

Or log in with...